Tuesday, December 4, 2012

விவேகானந்தரின் பொன்மொழிகள் 

எதைசெய்தாலும் அதன்பொருட்டு மனம்,இதயம் ஆன்மா என்று அனைத்தையும் அர்ப்பணித்துவிடுங்கள்,எதிர்நீச்சல் போடுவதன்மூலம் வெற்றி நிச்சயம் கிட்டும்.

எதிர்காலத்தில் நாம்  எப்படி இருக்க நினைக்கிறோமோ,அதை நாம் இப்போதைய செயல்களால் செய்துகொள்ள முடியும்.

நல்ல மற்றும் தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம்.எப்போதும் நம்மை நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கி கொள்ள முயற்சிக்கவேண்டும்.

தூய்மை,பொறுமை,விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு அடிப்படையானவை.இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாகவேண்டும்

 மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல்  வளர வளர உங்களின் அறிவாற்றல் பன்மடங்கு பெருகிவிடும் .

விடாமுயற்றி  உடையவன் சமுத்திரத்தையே குடித்துவிடுவான்.மலையையும் நொருங்கிவிழ செய்துவிடுவான்.
லட்சியத்தில் உறுதியான பிடிப்புடன் இருங்கள்,யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாதிர்கள்,நிச்சயம் ஒரு நாள் உலகம் உங்கள் காலடியில் பணிந்துகிடக்கும்.

No comments:

Post a Comment